முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு பலமாக அடிகொடுக்க காத்திருக்கும் ராஜபக்சர்கள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கழுகு தொடர்பாக உவமைக்கதையினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினரிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பொதுஜன முன்னணியினர், பிரதமரிடமும், முன்னாள் அமைச்சர் பெஸில் ராஜபக்சவிடமும் எடுத்துக் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மிகவிரைவில் மைத்திரிக்கான பதிலை வழங்க ராஜபக்ச அணியினர் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவருகின்றது.